இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி, முன்னதாக இடம்பெற்ற ஒரே ஒரு 20க்கு இருபது போட்டியில் வெற்றியீட்டியது.
தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-2 எனக் கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இங்கிலாந்து சார்பில் குக் 17 ஓட்டங்களுடனும், ரொப்சன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.
எனினும் சிறப்பாக ஆடிய ரூட் சதமடித்தார். மேலும் அயன் பெல் 56 ஓட்டங்களை விளாசிய நிலையில் வௌியேறினர்.
நேற்றைய முதலாம் நாள் முடிவில் 344 ஓட்டங்களை எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
ரூட் 102 ஓட்டங்களுடனும் மாட் பிரையர் 76 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்