ட்ரை ஃப்ரூட் போளி

ட்ரை ஃப்ரூட் போளி
தேவையான பொருட்கள்:
 
ஊற வைத்து தோல் உரித்த பாதாம், பிஸ்தா, முந்திரி – தலா 10
உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் – தலா 4
பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் – தலா ஒரு கப்
மைதா மாவு – ஒரு கப்
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய் – ஒரு சிறிய கப்
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்.
 
செய்முறை:
 
பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரீச்சை, திராட்சை ஆகியவற்றை 10 நிமிடம் ஊற வைத்து… தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இதனுடன் வெல்லம் சேர்த்து கெட்டியான பூரணமாகக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருட்டிக் கொள்ளவும்.
 
மைதா மாவுடன் கேசரி பவுடர், நல்லெண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து,. சிறிய சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். இதை ஒரு வாழை இலையில் வைத்து, நடுவில் பூரண உருண்டை வைத்து மூடி, போளியாக தட்டி, தோசைக் கல்லில் போட்டு மிதமான தீயில் இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.