சோயா பீன்ஸ் அடை

சோயா பீன்ஸ் அடை
என்னென்ன தேவை?
 
சோயா பீன்ஸ் - 1 கப்,
இட்லி மாவு - 1 கரண்டி,
வெங்காயம் - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.
 
 
எப்படிச் செய்வது?
 
சோயா பீன்ஸை 12 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய சோயா பீன்சுடன் காய்ந்த மிளகாய், தேவையான உப்பு, பெருங்காயத்தூள், சிறிது தண்ணீர்  சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைத்த மாவுடன், இட்லி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து  அடைகளாக வார்க்கவும்.