சிரியாவில் குண்டுவெடிப்பு: 35 பேர் பலி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் இரு கார் குண்டுகள் வெடித்ததில் குறைந்தபட்சம் 35 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

புதனன்று காலை 7 மணிக்கு முன்னதாக கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இந்த இரு குண்டுகளும் ஜரமனா என்னும் புறநகர் சதுக்கத்தில் வெடித்தன.

இந்தத் தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியதாக சிரியாவின் அரச ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னதாக, காலையில் அரசாங்க படையினருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையே அந்தப் பகுதியில் மோதலும் இடம்பெற்றதாக ஜரமனாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ட்ருஸ் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த நகரில் அதிகமாக வாழ்கின்றனர். ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான கிளர்ச்சியில் இவர்கள் இதுவரை கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.