சாதனை: உலகின் உயரம் குறைந்த இயக்குனர் பக்ரு

தமிழில் டிஷ்யூம் உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நகைச்சுவை நடிகர் பக்ரு.

70 சென்டி மீற்றரே உயரம் உள்ள பக்ரு அற்புத தீவு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு உயரம் குறைவான கதாநாயகன் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பக்ரு தற்போது அடுத்த சாதனைக்கு தயாராகி உள்ளார்.

அதாவது குழந்தைகளுக்கான நகைச்சுவை படமான குட்டியும் கோலும் என்ற படத்தை இயக்கவிருப்பதன் மூலம், உலகின் உயரம் குறைந்த இயக்குனர் என்ற சாதனையை படைக்கவிருக்கிறார்.

இப்படத்தில் குட்டியாக பக்ரு நடிக்கிறார். கோல் என்பது மந்திரகோலை குறிக்கிறது. இக்கோலை வைத்து அவர் சிறுவர்களின் பிரச்னையை எவ்வாறு தீர்க்கிறார் என்பதே இப்படத்தின் கதை.

இது குறித்து கூறுகையில், குட்டியும் கோலும் ஒரு முழு கமர்ஷியல் படம். நவம்பர் மாதம் தொடங்கி ஒரே ஷெட்டியூலில் படம் முடிகிறது. டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். கமெராவில் கோணம் பார்ப்பதற்காக தனி நாற்காலி தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.