சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்கவர்கள் வரிசைப்படுத்தலில் முதலிடத்தில் பராக் ஒபாமா

ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் உள்ள செல்வாக்கு மிக்கவர்கள் என்ற ஒரு வரிசைப்படுத்தல் விபரத்தை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தனது இந்த ஆண்டுக்கான விபரம் அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் அமெரிக்காவின் முதல் குடிமகனாக இருந்து அடிசி புரிந்து கொண்டிருக்கும் பராக் ஒபாமா.

நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் இந்த பத்திரிக்கை உலகில் அதிகாரம், அரசியல், மனிதநேயம் மற்றும் தொழில் என செல்வாக்கு மிக்கவர்களின் 2012-ஆண்டுக்கான பெயர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

அந்த பத்திரிக்கையின் விபரம் வருமாறு:-

1. பராக் ஒபாமா (51) – அமெரிக்கா அதிபர், 2. ஏஞ்ஜெலா மெர்கெல் (58) – ஜெர்மனி சான்சிலர், 3. விளாதிமிர் புதின் (60) – ரஷ்யா அதிபர், 4. பில்கேட்ஸ் சேர்மன் (57) – பில்-மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன், 5. போப் பெனடிக்ட் 16 (85) – போப்-ரோமன் கத்தோலிக் சர்ச், 6. பெர்ன் பெர்னான்கே (58) – சேர்மன் அமெரிக்கா பெடரல் ரிசர்வ், 7. அப்துல்லா பின் அப்துல் அசிஸ் அல் சாத் கிங் (88) – சவூதி அரேபியா, 8. மரியோதராகி தலைவர் (65) – யூரோப்பியன் மத்தியவங்கி, 9. ஜி ஜின்பிங் (59) – பொதுச்செயலாளர்-கம்யூனிஸ்ட் கட்சி சீனா, 10. டேவிட் கேமரூன் (46) – பிரிட்டன் பிரதம மந்திரி.

இந்த பட்டியலில் சோனியா காந்தி 12-வது இடத்தில் உள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டில் 11-வது இடத்தை பிடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வலிமையில் உலகின் 10-வது மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியாவை தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியை சோனியாகாந்தி வழிநடத்தி செல்கிறார். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற பொருளியல் வல்லுனர் ஆவார். சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் இவர் 19-வது இடத்தில் உள்ளார்.