குருதிஷ் செயற்பாட்டாளர்கள் பாரிஸில் கொலை

பாரிஸில் குருதிஷ் பெண் செயற்பாட்டாளர்கள்  மூவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்  காயங்களுடன் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பாரிஸிலுள்ள குருதிஷ் நிறுவனமொன்றிலேயே இவர்கள்  சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

இப்பெண்களில் ஒருவர் குருதிஷ் பிரிவினைவாத அமைப்பின் இணை ஸ்தாபகரெனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவை சகிக்கமுடியாத கொலைகளென பிரான்ஸ் உட்துறை அமைச்சர் மானுவல் வோல்ஸ் விபரித்துள்ளார். 

இத்துப்பாக்கிச் சூடுகளுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. பி.கே.கே. எனப்படும் பிரிவினைவாத அமைப்புக்கும் துருக்கிய அரசாங்கத்துக்குமிடையிலான 25 வருடகால மோதலில் சுமார் 40,000 பேர் வரையில்  கொல்லப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும் பி.கே.கே. எனப்படும் பிரிவினைவாத அமைப்பின் சிறையிலுள்ள தலைவரான அப்துல்லா ஒகலனுடன் ஆயுதங்களைக் களைய இணங்கவைப்பதற்கான பேச்சுவார்த்தையை துருக்கி அண்மையில் ஆரம்பித்திருந்தது.