கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார் (PHOTOS)

கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார் (PHOTOS)
கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்தார்.
 
கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் மேற்படி நிகழ்வு இன்றைய தினம் (12) இடம்பெற்றது.
 
இதில் தொழில்நுட்பப் பாடநெறிகளை பாடவிதானங்களில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு  60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய கட்டிடம் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வ திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.
இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உரைநிகழ்த்தினர்.
 
இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினர் பல்துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.