கிராமத்து காதலில் உருவாகும் மணிமேகலை

கொலிவுட்டில் Big Box Cinemas பட நிறுவனம் மணிமேகலை என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தை டி.கே.பிரபாகரன் இயக்கி இசையமைக்கிறார்.

மணிமேகலை படம் கிராமத்து காதல் கதையை பின்னணியாக வைத்து தயாரிக்கப்படுகிறது.

கதாநாயகன் மணிமாறா நடுத்தர குடும்பத்து வாலிபனாக வருகிறார். இவர் தன்னை விட பணக்கார குடும்ப பெண்ணான மணிமேகலையை காதலிக்கிறார்.

இதற்கு நாயகி குடும்பத்தின் புறம் கடும் எதிர்ப்பு எழுகிறது.இருப்பினும் இப்படத்தின் க்ளைமாக்ஸில் இயக்குனர் டி.கே.பிரபாகரன் திருப்பத்தை வைக்கிறார்.

இப்படத்தை கே.கிஷோர் ஒளிப்பதிவு செய்கிறார்.மற்றும் இந்த படத்தில் மலையாள துறையில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.