கம்போடிய யுத்தக் குற்றம் ; ஐ.நாவின் தீர்ப்பு இன்று

கம்போடிய யுத்தக் குற்றம் ; ஐ.நாவின் தீர்ப்பு இன்று
கம்போடியாவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் யுத்தக் குற்ற தீர்ப்பாயமே இன்று இத்தீர்ப்பைப் பிறப்பிக்கவுள்ளது.
 
1980களில் இடம்பெற்ற கம்போடிய யுத்தத்தில் பாரிய போர்க்குற்றங்கள் இடம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் கம்போடியாவின் தலைவராக இருநத பொல்பொட்டினால் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தில் சுமார் இரண்டு மில்லியன் பொது மக்கள்  கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் 1998ம் ஆண்டு பொல்பொட் உயிரிழந்தார்.
 
இந்த யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நோன் சே மற்றும் கியு சம்பன் ஆகிய இரண்டு பேர் மாத்திரமே தற்போது உயிருடன் உள்ளனர்.அவர்களுக்கு எதிரான தீர்ப்பே இன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.