ஒக்டோபர் 1ல் துப்பாக்கி இசை வெளியீடு!

விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இத்திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. திரைப்படத்தின் ஆடியோ ஒக்டோபர் 1ம் திகதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ´துப்பாக்கி´ படத் தலைப்பு மீதான வழக்கு விசாரனை நாளை மீண்டும் நீதிமன்றத்துக்கு வருகிறது. அநேகமாக தலைப்பு பிரச்னை நாளையுடன் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படுகிறது.