ஐ படம் ஆங்கில படத்தின் காப்பியா..? வெளியாகியது ஐ படத்தின் கதை!

ஐ படம் ஆங்கில படத்தின் காப்பியா..? வெளியாகியது ஐ படத்தின் கதை!
ஐ படத்தின் கதை 1986-ல் வெளிவந்த the fly படத்தின் காப்பி என தகவல்கள் வந்தன.  இது தொடர்பில் ஐ படத்தின் முழுக்கதையையும் கொட்டி தீர்த்துவிட்டார் ஷங்கரின் உதவியாளர். முதலில் ஐ படத்தின் முழுக்கதையையும் பார்ப்போம்
 
ஐ படத்தின் கதை:-
 
விக்ரம் ஒரு சாதாரண விவசாயி. ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றது. ஆனால் விக்ரம், எமியை நெருங்க முடியவில்லை. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார். தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார்.
 
இந்நிலையின் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடுக்கின்றார். அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திர தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்கின்றார். ஆனால் அதை பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை. அந்த சமயத்தில் தான் விக்ரம் உபேனை சந்திக்கின்றார்.
 
விக்ரம் உடம்பில் அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மறுக்கின்றார். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார் விக்ரம். ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார். எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவரை கடத்துகின்றார். ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என கண்டுபிடிக்கின்றார். அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாறியுள்ளார்.
 
இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூர விலங்குகளாக மோதுகின்றனர். பின்னர் மாற்று மருந்து கண்டுபிடித்து விக்ரம் மாறினாரா இல்லையா என்பது படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
தற்பொழுது the fly படத்தை பற்றி பார்ப்போம்:-
 
ஃப்ளை படத்தில் நாயகன் ஒரு பத்திரிக்கையாளர். அவர் கண்ணுக்கு தெரியாத உளவாளியாக மாற வேண்டும் என ஆசைப்படுகின்றார். அது போன்றே ஒரு மருந்தை கண்டு பிடித்து உளவாளியாக அதாவது ஈ-யாக மாறுகின்றார். எதிரிகளின் இடத்திற்கே ஈ உருவத்தில் சென்று அவர்கள் செய்வது அனைத்தையும் தெரிந்து கொள்கின்றார். பின்னர் மருந்தின் வீரியம் அதிகரித்து கேவலமான உடலை பெறுகின்றார். இறுதியில் மனிதனாக மாறினாரா என்பது க்ளைமேக்ஸ்.
 
இந்த இரு படத்திலும் உருவம் மாறுவது என்ற ஒரே ஒரு கொள்கை மட்டுமே ஒற்றுமை படுகின்றது. the fly படத்தின் கதை வேறு. ஐ படத்தின் கதை வேறு. யாரவது ஐ படம் காப்பி என்று கூறினால், வேண்டும் என்றே புரளியை கிளப்புகின்றார் என்று தான் கூறவேண்டும்.