ஐ.நா.வில் பலஸ்தீனியர்களின் அந்தஸ்து உயர்த்தப்பட்டது

ஐ.நா. பொதுச்சபை, பலஸ்தீனியர்களுக்கு உறுப்பினர் அல்லாத  பார்வையாளர் அந்தஸ்து நாடென்ற அங்கீகாரம் வழங்குவதற்கு வாக்களித்துள்ளது. எனினும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன.

இதற்கு ஆதரவாக 138 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 41 நாடுகள் இதற்கான வாக்களிப்பில் ஈடுபடவில்லை.

இந்த வாக்களிப்பானது இஸ்ரேலுடனான இரு மாநில தீர்வை பாதுகாப்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம் என பலஸ்தீன ஜனாதிபதி  முஹம்மத் அப்பாஸ் சபையில் தெரிவித்துள்ளார்.

சமாதான செயன்முறையை பின்னோக்கித் தள்ளியுள்ளது என ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதுவர் தெரிவித்துள்ள அதேவேளை, இந்த நடவடிக்கை துரதிர்ஷ்டவசமானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.