உக்ரைனின் வேவு விமானத்தை சுட்டு விழுத்திய ரஷ்ய கிளர்ச்சிப்படை : எம்.எச்17க்கு அருகில் இடம்பெற்றுள்ளது!

உக்ரைனின் வேவு விமானத்தை சுட்டு விழுத்திய ரஷ்ய கிளர்ச்சிப்படை : எம்.எச்17க்கு அருகில் இடம்பெற்றுள்ளது!
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியை ஏற்படுத்திவரும் ரஷ்ய ஆதரவு போராளிகள் மீண்டும் ஒரு விமானத்தை சுட்டு விழுத்தியுள்ளனர். இந்த விமானம் உக்ரைன் இராணுவத்தினருக்கு சொந்தமான உளவு விமானம் ஆகும். 
 
கடந்த 17 ஆம் திகதி சுட்டு விழுத்தப்பட்ட மலேசிய பயணிகள் விமானம் விழுந்த இடத்தில் இருந்து 15 மைல்கள் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுட்டு விழுத்தப்பட்ட விமானத்தின் அருகில் நின்றவாறு கிளர்ச்சியாளர்கள் படங்கள் எடுத்து இணையத்தில் பரவ விட்டுள்ளனர்.
 
இணையத்தில் சமூக வலைத்தளத்தில் ரஷ்ய மொழியில் படக்குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அக்குறிப்பில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் போர் நாயகர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. 
 
பாதுகாப்பு காரணங்களால் மேற்குறிப்பிட்ட நிகழ்வை ஆராய்ந்து பார்க்க முடியாத நிலையில் இந்த சம்பவம் உண்மை என்று கருதினால் மலேசிய விமானம் இந்த விமானத்தில் இருந்த 15 மைல்கள் தொலைவிலே விழுந்திருக்க வேண்டும். 
 
இதேவேளை மலேசிய விமானம் சுட்டு விழுத்தப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணையாளர்கள் தங்கள் பணியினை ஆரம்பித்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் வேவு விமானம் விழுத்தப்பட்டமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மலேசிய விமானம் சுட்டு விழுத்தப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எந்த தரப்பும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்த இரண்டாவது சிறு விமானம் சுட்டு விழுத்தப்பட்டமையும் அதன் பின்னணியில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் இருப்பதும் வெளிப்படையாகியுள்ளது.