இலங்கைக்கு 2ம் இடம் - கோலிக்கு முதலிடம் - ஐசிசி

இலங்கைக்கு 2ம் இடம் - கோலிக்கு முதலிடம் - ஐசிசி

ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் சிறந்து விளங்கும் அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. 

இதில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 3-வது இடத்துக்குப் பின்தங்கியது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை 3-2 என இலங்கை வென்றிருந்தது. இதன்மூலம் இந்தியாவும், இலங்கையும் ஒரே அளவு (112) தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றிருந்தது. 

இருப்பினும், தசம புள்ளிகளின் அடிப்படையில் இலங்கை 2-வது இடத்துக்கு முன்னேறியது. ஆனால், வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தோனி 6-வது இடத்திலும், ஷிகர் தவன் 8-வது இடத்திலும், ரோஹித் 20-வது இடத்திலும் உள்ளனர். பந்து வீச்சாளர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.