ஆப்கானிஸ்தானுக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு 254

ஆப்கானிஸ்தானுக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு 254

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

டாக்காவில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 254 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. 

இலங்கை அணி சார்பில் சங்கக்கார 102 பந்துகளை எதிர்கொண்டு 76 ஓட்டங்களையும் பெரேரா 49 பந்துகளுக்கு 33 ஓட்டங்களையும் மெத்தியூஸ் அட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இதற்கு முன் இலங்கை அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.