ஆதிபகவன் இசை வெளியீட்டு விழா கனடாவில்

 

கொலிவுட்டில் ‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ ஆகியப் படங்களுக்குப் பின்பு அமீர் இயக்கும் நான்காவது படம் ‘ஆதிபகவன்’.
இதில் நாயகனாக ஜெயம் ரவியும், நாயகியாக நீதுசந்திராவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சுதாசந்திரன், பாபு ஆண்டணி, அனிருத் மற்றும் பல புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் ஆதிபகவன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வரும் 6ம் திகதியன்று கனடாவின், டொரொண்டோ நகரில் நடைபெற உள்ளது.

இதற்காக இயக்குனர் அமீர், தனது படக்குழுவினருடன் நேற்று முன்தினம் இரவு கனடா புறப்பட்டுச் சென்றார்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன் உள்ளிட்ட ஐம்பது பேர் கொண்ட குழுவினரும் நேற்று முன் தினம் இரவு கனடா புறப்பட்டுச் சென்றனர்.

சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமீர் கூறுகையில், கனடா சென்று வந்த பின்பு நானும், எனது படக்குழுவினரும் சென்னையில் நடைபெற இருக்கும் ‘ஆதிபகவன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அனைவரையும் சந்திப்போம் என்றார்.