அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 20/20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில்  இன்றைய தினம் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதுகின்றன முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

179 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஹெயில் 53 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.