அரச ஊழியர்களுக்கு 2,200 ரூபா சம்பள உயர்வு!

அரச ஊழியர்களுக்கு 2,200 ரூபா சம்பள உயர்வு!
அரச ஊழியர்களுக்கு 2,200 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். அனைத்து அரச ஊழியர்களுக்குமான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவிலேயே 2200 அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள் சம்பளத் தொகையோடு இணைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
 
அரச துறைகளுக்கு ஊழியர்கள் 5 இலட்சம் பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
ரயில் ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க 2000 மில்லியன் ஒதுக்கீடு 
 
ஆடை தொழிற்சாலை ஊழியர்ளுக்கு ஓய்வூதியம்
 
ஆயுர்வேத வைத்தியர்களுக்கு 5000 கொடுப்பனவு அதிகரிப்பு
 
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 500 இலிருந்து 1500 ஆக அதிகரிப்பு
 
ஆசிரியர்களின் சம்பள, பதவி உயர்வுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
 
50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்களுக்கு 9500 கொடுப்பனவு
 
மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு மாதாந்தம் 4000 ரூபாவாக அதிகரிப்பு 
 
முதியவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 2000 ஆக அதிகரிப்பு
 
விசேட தேவையுடையோருக்கு மாதாந்தம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு
 
எனவும் குறிப்பிட்டிருந்தார்.