அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் ஒபாமா தெரிவு

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 275 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து 2வது முறையாக ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ரோம்னியை விட தேர்தல் சபை வாக்குகள் ஒபாமா அதிகம் பெற்றதால் அவர் வெற்றி பெற்றார்.

ஜனநாயக கட்சியின் ஒபாமாவுக்கு 275 தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்தது.

ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ரோம்னிக்கு 203 தேர்தல் உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்தது. ஒபாமா வெற்றியால் சிகாகோவில் ஜனநாயக கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.