250 சிறுவர் சிறுமியரை வைத்து நீலப்படங்கள் தயாரிப்பு

அமெரிக்காவில் 250 க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியரை வைத்து நீலப்படங்களை தயாரித்த 14 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். 

சிறுவர் - சிறுமியரை பாலுறவில் ஈடுபடுத்தி, அந்த காட்சிகளை படமாக்கி சிலர் இணையதளங்களின் மூலம் உலக நாடுகளில் வெளியிட்டு வந்தனர். இது தொடர்பாக வந்த புகார்களையடுத்து, நாட்டின் அனைத்து பிரிவு போலீசாரின் துணையுடன் அமெரிக்க உள்நாட்டு பொலிசார், வெகு நாட்களாக கண்காணித்து, இதற்கு காரணமான பெரிய கும்பலை சேர்ந்த 14 பேரை கைது செய்துள்ளனர். 

13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமியரை சம வயதுடைய சிறுவர்களுடன் பாலுறவில் ஈடுபடுத்தி, அந்த காட்சிகளை பணம் (சந்தா) செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இண்டர்நெட் மூலம் இந்த கும்பல் ஒளிபரப்பி வந்துள்ளது. 

கடந்த 2012-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த இந்த இணையதளத்திற்கு உலகின் பல நாடுகளை சேர்ந்த சுமார் 27 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளதையும் கண்டுபிடித்த பொலிசார், அவர்கள் தொடர்பான விபரங்களை வெவ்வேறு நாட்டு பொலிசாரின் துணையுடன் சேகரித்து வருகின்றனர். 

இந்த நீலப்படங்களில் நடிப்பதற்காக அமெரிக்காவின் 39 மாநிலங்கள் மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற 5 வெளி நாடுகளில் இருந்து சிறுவர்-சிறுமியரை தேர்வு செய்துள்ளதும் பொலிசாரின் விசாரனையில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஜொனாதன் ஜான்சன் என்பவரும் ஒருவர். இந்த ஆபாச தளத்தின் இயக்குனரான இவர், அழகிய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் புகைப்படங்களை இணையதளங்களில் போலியாக வெளியிட்டு காதல் வலை விரிப்பார். 

அதில் மயங்கி விழும் சிறுவர்- சிறுமியரின் மனதை மாற்றி, பாலுறவில் ஈடுபடுத்தி, அந்த காட்சிகளை படமாக்கி, இந்த தொழிலுக்கு இவர் முதுகெலும்பாக இருந்து வந்துள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். 

அமெரிக்க வரலாற்றிலேயே இதைப் போன்ற பெரிய கும்பலின் தொடர்புடைய சிறுவர்-சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்றும் அவர்கள் வியப்புடன் குறிப்பிட்டனர்.