2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நாளை (06) ஆரம்பமாகின்றன.

இந்தவருடம் புதிய மற்றும் பழைய பாடத்த் திட்டத்தில் இரண்டு லட்சத்து 77,671 பேர் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

இவர்களுக்காக நாடு முழுவதிலும் 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இசெட் புள்ளி மீண்டும் வெளியிட்டதன் பின்னர் பரீட்சாத்திகள் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 2011ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெளியான இசெட் புள்ளி பிரச்சினைகள் தொடர்பில் தாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.

இசெட் புள்ளி மீண்டும் வெளியிடப்பட்ட காலப் பகுதியிலிருந்து 1750 மாணவர்கள் அதற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாகவும் மனித உரிமைகள் கண்கானிப்பகம் சுட்டிக் காட்டியுள்ளது.