20க்கு இருபது உலகக் கிண்ணம்: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 20க்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. 

5–வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் தகுதி சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் முதன்மை சுற்றான ‘சூப்பர் 10’ சுற்றுக்கு தகுதி பெறும். 

இந்த நிலையில் முதன்மை போட்டியான ‘சூப்பர் 10’ சுற்று இன்று (21) தொடங்குகிறது. நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகளும் தகுதி சுற்று மூலம் தேர்வு பெறும் 2 அணிகளும் ஆக மொத்தம் 10 அணிகள் இதில் விளையாடும் இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் வருமாறு:– 

குழு 1: தென்னாபிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் தேர்வான அணி (பி1). 

குழு 2: இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் தகுதிச்சுற்றில் தேர்வான அணி (ஏ1). 

இதன்படி இன்று தகுதிச் சுற்றில் மீதமுள்ள இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது. 

இதில் சிம்பாபே மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளதோடு, மற்றொரு போட்டியில் அயர்லாந்து அணியை நெதர்லாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது. 

அத்துடன் இன்று ஆரம்பமாகவும் ‘சூப்பர் 10’ சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.