20க்கு இருபது உலகக்கிண்ணம் - இன்றைய போட்டிகள்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 20க்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில் இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

முதலில் ஏப் பிரிவில் உள்ள ஆப்கனிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

அடுத்ததாக ஏப் பிரிவில் உள்ள பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இதேவேளை இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை மேற்கிந்திய தீவுகள் அணி எதிர்கொள்ளவுள்ளதோடு, மற்றுமொரு பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன.