ஹாட்ரிக் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு இலங்கை!

ஹாட்ரிக் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு இலங்கை!

20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் நாளை (27) 2 போட்டிகள் நடக்கவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் தென்ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. 

தென் ஆப்பிரிக்கா தொடக்க போட்டியில் இலங்கையிடம் தோற்றது. 2–வது போட்டியில் நியூசிலாந்தை வென்றது. பரபரப்பான இந்த போட்டியில் ஸ்டெய்னின் அபாரமான பந்துவீச்சால் 2 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 

பலவீனமான நெதர்லாந்தை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற தென் ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு உள்ளது. 

நெதர்லாந்து அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையிடம் 39 ஓட்டங்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. 

இரவு 7 மணிக்கு நடைபெறும் 2–வது போட்டியில் இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்துக்கு உள்ளது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்று இருந்தது. இலங்கையிடம் தோற்றால் இங்கிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து விடும். 

இலங்கை அணி தொடக்க போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வென்று இருந்தது. 2–வது போட்டியில் நெதர்லாந்தை நொறுக்கி தள்ளி இருந்தது. இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று அரை இறுதியில் நுழையும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.