வைத்தியசாலையின் புதிய கட்டிடப் பணிகள் பூர்த்தி; 29இல் நிர்வாகத்திடம் கையளிப்பு

வைத்தியசாலையின் புதிய கட்டிடப் பணிகள் பூர்த்தி; 29இல் நிர்வாகத்திடம் கையளிப்பு

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடப் பணிகள் பூர்த்தியான நிலையில்

எதிர்வரும் 29ஆம் திகதி  வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜப்பானின் இலங்கைக்கான வதிவிடப் பொறியியலாளர் ஸ்வோர் என்டோ இன்று தெரிவித்தார்.



ஜப்பான் அரசாங்கத்தின் 2.9 பில்லியன் நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தகாலம் எதிர்வரும் 29ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. சில வேலைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளதால் அதற்கான பணிகள் தற்போது நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.



எதிர்வரும் 29ஆம் திகதி வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ள இப்புதிய கட்டிடத்தை யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.



இப்புதிய கட்டிடத்தொகுதியில் கதிரியக்கப் பிரிவு, ஈ.சி.ஜி, சத்திரசிகிச்சைக்கூடம் ஆகியன உள்ளடங்குவதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் இக்கட்டிடத்தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் பவானந்தராஜா கூறினார்.