விலை உயர்ந்த விவாகரத்து

விலை உயர்ந்த விவாகரத்து

விவாகரத்து வழக்கில் மனைவியின் பராமரிப்பு தொகையாக 6.5 பில்லியன் டொலரை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தொழிலதிபர் ஒருவர் கொடுத்துள்ளார். 

சுவிஸ் நாட்டில் ரஷ்ய தொழிலதிபர் டிமிட்ரி ரெய்போலோவ்லிவ் வாழ்ந்து வருகிறார். இவர் உரத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது சொத்து மதிப்பு 2010 ஆண்டில் 6.5 பில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டது. 

தற்போது 100 பில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இவரது மனைவி எலினா இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற விரும்பினர். 

இதை தொடர்ந்து இருவரும் இணைந்து விவாகரத்துக்கு வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மனைவி எலினாவுக்கு 4,020,555,987 சுவிஸ் பிராங்க்குகள் பராமரிப்புத் தொகையாக வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். 

மேலும், அமெரிக்காவில் ரெய்போலோவ்லிவ்வுக்கு சொந்தமாக உள்ள ஒரு வீட்டையும், கிரீக் தீவில் உள்ள ஒரு வீட்டையும் மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீதிபதி தீர்ப்பு வழங்கியவுடன் ரெய்போலோவ்லிவ் தனது முன்னாள் மனைவிக்கு முழு தொகைக்கான காசோலையை நீதிமன்ற வளாகத்திலேயே கொடுத்துள்ளார். 

இது உலக அளவில் மிக உயர்ந்த பராமரிப்பு தொகையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.