விடைபெறுகிறார் கலிஸ்

விடைபெறுகிறார் கலிஸ்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜெக் கலிஸ் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 
 
டெஸ்ட் போட்டிகளிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் ஓய்வுபெற்ற கலிஸ் தற்போது ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   
 
166 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 13289 ஓட்டங்களைப் பெற்றுள்ள ஜெக் கலிஸ் 328 ஒருநாள் போட்டிகளில் 11579 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதேவேளை 25 இருபதுக்கு-20 போட்டிகளில் பங்கேற்றுள்ள  ஜெக் கலிஸ் 666 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது