வடமாகாண சுப்பர் கிங்' போட்டியில் நாவந்துறை சென் மேரிஸ் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது!

'வடமாகாண சுப்பர் கிங்' உதைபந்தாட்டப்போட்டியில் யாழ் நாவாந்துறை சென் மேரிஸ் அணி 5 கோல்களை அடித்து கேடயத்தை சவிகரித்துக்கொண்டது.
 
'வடமாகாண சுப்பர் கிங்' உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யாழ். உரும்பிராய் மைதானத்தில் நேற்றைய தினம் (22.06.2014) இடம்பெற்ற போதே சென் மேரிஸ் அணி கேடயத்தை தனதாக்கியிருக்கின்றது.
 
'வடமாகாண சுப்பர் கிங்' உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிக்கு மன்னார் கில்லரி அணியும் யாழ் நாவாந்துறை சென் மேரிஸ் அணியும் தகுதி பெற்றிருந்தன.
 
'வடமாகாண சுப்பர் கிங்' உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் மன்னார் கில்லரி அணி வலைப்பாடு ஜேம்பிப்பர் அணியுடன் மோதி இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருந்தது.
 
இந்நிலையில் நேற்றைய தினம் (22.06.2014) மன்னார் கில்லரி அணி யாழ் நாவாந்துறை சென் மேரிஸ் அணியை எதிர் கொண்டு 01ற்கு 05 எனும் கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருக்கின்றது.
 
ஆட்டத்தின் இடைவேளைக்கு முன்பதாக நாவாந்துறை சென் மேரிஸ் அணி 04 கோல்களை போட்டதுடன் மன்னார் கில்லரி அணி ஒரு கோல் போட்டிருந்தது.இடைவேலைக்கு பின்னரான நேரப்பகுதியில் சென் மேரிஸ் அணி மற்றுமொரு கோலினை போட்டு 05 கோல்கள் எனும் இலக்கினை எட்டியிருந்தது.
 
ஆடுகளத்தை சுற்றி பெருமளவிலான ஆதரவாளர்கள் உற்சாகம் ஊட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதும் ஆட்டம் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்று சுமுகமாக'வடமாகாண சுப்பர் கிங்' உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்று முடிந்திருக்கின்றது.
 
இந்நிலையில் 'வடமாகாண சுப்பர் கிங்' உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பங்கேற்ற அணிகளில் அதிக கோல்களை போட்ட அணியாகவும், இரண்டாம் நிலை வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்த அணியாகவும் மன்னார் கில்லரி அணி தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
 
அதேவேளை சிறந்த அணி முகாமைத்துவத்திற்கான கிண்ணத்தை மன்னார் சென் லூசியாஸ் அணி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது