யாழில் திருட்டுச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன: பொலிஸ்

யாழ் மாவட்டத்தில் வீடு உடைத்துகொள்ளையடித்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களை குறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கை காரணமாகவே இவை குறைவவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வாரத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இவ்வாரம் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக 80 முறைப்பாடுகள் பதிவு செய்யப்ப்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குடிபோதையில் வாகனங்கள் செலுத்துவோர் மீது விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஒரு வாரகாலத்தில் குடிபோதையில் வாகனங்கள் செலுத்திய 38 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.