மோடியால் பீதியில் உள்ள தாவூத் இப்ராகிம்

மோடியால் பீதியில் உள்ள தாவூத் இப்ராகிம்

மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் தாவூத் இப்ராகிம். நிழல் உலக தாதாவான இவர் இச்சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பி சென்றார். 

சர்வதேச அளவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட அவர் மிகவும் தேவைப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

தற்போது, பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ளார். இருந்தாலும் பாகிஸ்தானில் இல்லை என மறுத்து இந்தியாவிடம் அவரை ஒப்படைக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. 

ஆனால், ‘நான் பிரதமரானால் தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவேன்’ என தேர்தல் பிரசாரத்தின் போது தொலைக்காட்சியில் அளித்த போட்டியில் மோடி தெரிவித்தார். 

அவர் கூறியது போன்று தற்போது வெற்றி பெற்று பிரதமராக தேர்ந் தெடுக்கப்பட்டு விட்டார் 26–ம் திகதி பதவி ஏற்க உள்ளார். இது தாவூத் இப்ராகிமுக்கு கடும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஏற்கனவே தெரிவித்தபடி தன்னை மோடி இந்தியாவுக்கு கொண்டு சென்று விடுவார் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, கராச்சியில் இருந்து தனது வீட்டை வளைகுடா பகுதிக்கு அவர் மாற்றி விட்டார். இதை அவரது கூட்டாளி சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.