மூன்று விருதுகள் சங்கக்காரவுக்கு

 

2012ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரருக்கான விருது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு கிடைத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் விழா 2012, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இதன்போது சங்கக்காரவுக்கு மூன்று விருதுகள் கிடைத்தமை விசேட அம்சமாகும்.

 


சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் வெளிப்படுத்திய ஆற்றல்களை கருத்திற்கொண்டு இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விருது விபரம்:-

ஆண்டின் சிறந்த வீரர் - குமார் சங்கக்கார
சிறந்த டெஸ்ட் வீரர் - குமார் சங்கக்கார
மக்கள் மனங்கவர் வீரர் - குமார் சங்கக்கார
வருடத்தின் வளர்ந்து வரும் வீரர் - டினேஷ் சந்திமால்
சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் - ரங்கன ஹேரத்
சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர் - அஹேல ஜயவர்தன
சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர் - லசித் மாலிங்க
சகலதுறை வீரர் - டி.எம்.டில்ஷான்