மாவீரர்களின் உயிர் தியாகத்தை மனங்களில் ஒளிச்சுடராக ஏற்றி தியாகங்களுக்கு கௌரவம் சேர்ப்போம் ; எஸ்.விஜயகாந்

மாவீரர்களின் உயிர் தியாகத்தை மனங்களில் ஒளிச்சுடராக ஏற்றி தியாகங்களுக்கு கௌரவம் சேர்ப்போம் ; எஸ்.விஜயகாந்
26.11.2014
கௌரவ முதலமைச்சர்,
சி.வி.விக்கினேஸ்வரன்
வட மாகாணசபை
யாழ்ப்பாணம்.
      
ஜயா
 
          மாவீரர்களின் உயிர் தியாகத்தை மனங்களில் ஒளிச்சுடராக ஏற்றி தியாகங்களுக்கு கௌரவம் சேர்ப்போம்
 
    தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை நடாத்தியும் வருபவர்களான முற்போக்குத் தமிழ் தேசியக் கட்சியினர் ஆகிய நாம் எமது விடுதலைக்கு போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்டபாக ஒரு முக்கிய கோரிக்கையை உங்களிடம் பணிவுடனும் உரிமையுடனும் முன்வைக்கின்றோம்.
 
     கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற ஆயுதப்போராட்ட வடிவிலானா எமது விடுதலைப்போராட்டத்தில் நாம் பல்லாயிரக்கணக்கான மக்களையும் விடுதலைப் போராளிகளையும்  பறிகொடுத்துள்ளோம். 
 
அந்த மகத்தான போராட்டம் இன்று மௌனிக்கப்பட்ட போதிலும் அதில் எமது போராளிகளும் மக்களும் மேற்கொண்ட தியாகங்களும் அற்பணிப்புகளும் கையேந்திய விடுதலை வேட்கையும் இலட்சிய உணர்வும் என்றென்றும் நிலைத்திருந்து எமது உரிமைப் போராட்டத்திற்கு ஒளி ஏற்றும்.
 
      எமது விடுதலைப்போராட்டத்தில் எல்லையற்ற அர்ப்பண உணர்வுடன் களமாடி வீரச்சாவைத்தழுவிய மாவீரர்களின் தியாகம் உயிர்க்கொடைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. 
 
அவர்கள் வாழும் போதே வியர்வையும் இரத்தமும் சிந்தி எமது இலட்சியத்தை முன்னெடுத்து சென்றவர்கள். பசி, மழை, வெயில், பனி, தூக்கமின்மை என சகல துன்பங்களையும் தாங்கி நின்று விடுதலை ஒன்றையே இலக்காகக் கொண்டு களமாடியவர்கள். கல்லும் முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்தவர்கள்ää கட்டாந் தரையில் படுத்து உறங்கியவர்கள், சேற்று நீரைப் பருகி தாகம் தீர்த்தவர்கள். 
 
        அவர்களின் அர்ப்பணிப்பான வாழ்வும் சாவும் ஒப்புவமையற்றவை. அவர்களை ஆட்சியாளர்கள் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டலாம். ஆனால் எமது மக்கள் அவர்களின் மீட்பாளர்களாகவே பார்க்கின்றார்கள.; எமது மக்கள் தமது மாவீரர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் மறுக்க முடியாது.
 
    அதனால் தான் இத்தனை தடைகள் மத்தியிலும் எமது மக்கள் மாவீரர்களை உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்து அஞ்சலி செய்து வருகின்றனர். அதை எவ்வித கொடிய ஒடுக்கு முறையாலும் தடுத்து விட முடியாது என்பதை வருடா வருடம் எமது மக்கள் நிரூபித்து வருகின்றனர். 
   
    நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத் போன்ற போராட்டத் தலைவர்களும் ஒரு காலத்தில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டவர்கள் தான் பின்பு அவர்கள் உலகத்தலைவர்கள் வரிசையில் ஏற்க்கப்பட்டவை நாம் மறந்து விட முடியாது. 
 
அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒருவரை பயங்கரவாதி என தமது நிகழ்சி நிரலுக்கு ஏற்ற வகையில் வர்ணிக்கும் போது ஒடுக்கு முறைக்கு உட்பட்ட மக்கள் அதை என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. 
 
எனவே எம்மைப் பொறுத்த வரையில் மாவீரர்கள் எமது போரட்டத்தின் முன்னோடிகள் அவர்கள் என்றென்றும் எமது மக்களின் இதயத்தில் நிலைத்திருக்கும் அற்புதப் பிறவிகள். 
 
     எமது மாகாணசபையும் மாகாணசபையின் உறுப்பினர்கள் பலரும் பல்வேறு விதமான நெருக்கடிகள் மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருவதையிட்டு நாம் பெருமை அடைகின்றோம். அத்துடன் அப் புனித கைங்கரியத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்
     மாவீரர்களைப் போலவே மாவீரர்களின் குடும்பத்தினரும் போற்றுதலுக்கு உரியவர்கள் அவர்கள் தாம் பெற்ற செல்வங்களை விடுதலைக்கு அர்ப்பணித்து விட்டு கண்ணீர் சிந்தி துயர் சுமப்பவர்கள் அவர்களில் பலர் இன்றும் வறுமையிலும் துன்பத்திலும் வாடிவதங்குகின்றனர். அவர்களை இப்படியான ஓர் அவல நிலையில் தவிக்க விடுவது பொருத்தமற்றது. 
 
என நாம் திட்டவட்டமாக கருதுகின்றோம். உலகத் தமிழ் மக்களின் அரசாங்கமாக திகழ்கின்ற தாங்கள் பொறுப்பேற்று வழிநடத்தி வருகின்ற வடமாகாண சபை எமது மாவீரர் குடும்பங்களுக்கு நிரந்தர நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே எமது அன்பான வேண்டுகோளாகும் அந்தக் குடும்பங்களின் துயரங்களைப் போக்குவது மாவீரர்களுக்கு செய்யும் உன்னதமான அஞ்சலி என்றே நாம் கருதுகின்றோம்.
 
     எனவே முதலமைச்சர் அவர்கள் மாகாணசபையின் பொறுப்பில் ஒரு நிதியத்தை ஆரம்பித்தோ அல்லது பொருத்தமான வேறு எந்த விதத்திலோ மாவீரர் குடும்பங்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் உரிமையுடன் கோருகின்றோம்.
 
 இம்முறை நவம்பர் 27 அன்று மாவீரர் நாளையொட்டி பணி ஆரம்பிக்கப்படுமானால் நாம் மிகவும் மகிழ்சியடைவோம் மேலும் அப்பணி சிறப்புற நிறைவேற முற்போக்குத் தமிழ் தேசியக் கட்சியினர் ஆகிய நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி பணியாற்றுவோம் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
நன்றி
 
     எஸ்.விஜயகாந்
(முன்னாள் மாநகரசபை உறுப்பினர்)
செயலாளர் நாயகம்
முற்போக்கு தமிழ் தேசியக் கட்சி.