மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள கொங்கிரீட் வீதிகளினால் மக்கள் சிரமம்!

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயல் திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் முரண்பாடுகளினால் பாதீக்கப்பட்ட பிரதேசங்களுக்காண அவசர வேலைத்திட்டத்தின் கீழ் மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொங்கீரீட் வீதியினால் மன்னார் மக்கள் எதிர் வரும் காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயல் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சிறீலங்கா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் குறித்த கொங்கிரீட் வீதிகள் மன்னாரில் அமைக்கப்பட்டு வருகின்றது.
பல மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கொங்கிரீட் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அதி உயரம் கொண்ட வீதியாக குறித்த வீதிகள் பல அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வீதிகளுக்கு அருகில் கழிவு நீர் வடிகான் எவையும் அமைக்கப்படவில்லை.மழை காலங்களில் வீடுகளில் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை வெளியேற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.குறித்த வீதிகள் மக்களின் வீட்டு நிலத்தை வீட வீதி உயரமாக காணப்படுகின்றது.எதிர்வரும் மாதங்கள் மழைக்காலமாக உள்ளமையினால் மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே வீதி அபிவிருத்தி திணைக்களம் இவ்விடையத்தில் தலையிட்டு கழிவு நீர் வடிகாணை உடன் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.