மட்டக்களப்புக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 சீனப் பிரஜைகள் கைது

சிறீலங்கா கடல் எல்லையில் மட்டக்களப்புக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 சீனப் பிரஜைகள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகளுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த படகுகளில் பணியாற்றியவர்களில் இலங்கையர்கள் இருவரும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கடற்தொழில் அமைச்சுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய சிறீலங்காவில் இருந்து 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீனாவுக்கு உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அந்த உடன்படிக்கையை மீறும் வகையில் சிறீலங்கா கடற்பரப்பிற்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.