பேரழிவை ஏற்படுத்தியவை பெண் புயல்களே!

புயலுக்குப் பெண் பெயர்களை வைத்தால் அதனால் அழிவு அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். 

ஆண் பெயர்களை புயலுக்கு வைக்கும்போது அந்த ஆண் பெயர்கள் காரணமாக அதிக முன்னெச்செரிக்கையை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும், ஆனால் பெண் பெயர்களை வைக்கும்போது, அவ்வளவு அச்ச உணர்வை அது மக்கள் மனதில் ஏற்படுத்துவதில்லை என்றும், அதனால், மக்கள் குறைந்த அளவு முன்னெச்சரிக்கையையே எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்காவில் கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களை பற்றி ஆராய்ந்த இந்த ஆராய்ச்சியாளர்கள், பெண் பெயர்கள் சூட்டப்பட்ட புயல்கள், ஆண் பெயர்கள் சூட்டப்பட்ட புயல்களைக் காட்டிலும், இரட்டிப்பு மரணங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று கண்டறிந்திருக்கிறார்கள். 

இந்த அனிச்சையான பாலின மனோபாவம் காரணமாக விளையும் தயாராக இல்லாத நிலை அழிவை ஏற்படுத்துவதால், புயல் மற்றும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டும் முறையில் மாற்றம் வேண்டும் என்று அந்த விஞ்ஞானிகள் யோசனை கூறுகிறார்கள். 

புயலுக்கு எவ்வாறு பெயரிட்டாலும், பெயரைப் பார்க்காமல், ஒவ்வொரு புயலும் எந்த அளவுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கிறது என்பதை மக்கள் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். 

இதுதான் அமெரிக்க தேசிய புயல் தடுப்பு மையத்தின் அறிவுரை.