பெற்ற வெற்றியுடன் நெதர்லாந்து அணிக்கு 2 புள்ளிகள்!

16 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் ‘பி’ பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் நெதர்லந்து அணியும் மோதின. இதில் நாணய சுழற்சியை வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 

இதன்படி ஐக்கிய அரபு அணி 19.5 ஓவரில் 151 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாய்மன் அன்வர் 32 ஓட்டங்களும், குரம்கான் 31 ஓட்டங்களும் எடுத்தனர். நெதர்லந்து அணியின் பந்துவீச்சில் எம்ஏஏ ஜமில் 16 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். 

அடுத்தது 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் சுவார்ட் 26 ஓட்டங்களும், மைபர்க் 55 ஒட்டங்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதனை அடுத்த வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தினர். 

இதனால் நெதர்லந்து அணி 18.5 ஒவரில் 152 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுனெனைடட் அரபு அணி தரப்பில் கம்ரன் சயாத் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இதன்முலம் நெதர்லாந்து அணி 2 புள்ளிகளை பெற்றுள்ளது.