புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை வீரர் அஜந்த மென்டிஸ்

 

இலங்கை ஹ‌ம்ப‌ாந்தோட்டையில் நே‌ற்‌றிரவு நட‌ந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இல‌ங்கை அ‌ணி ஜிம்பாப்வே அ‌ணியுட‌ன் ‌விளையாடிது.
இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 8 ஓட்டங்களே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். டி20 சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஓர் வீரரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

இதற்கு முன்பு அவர் 2011ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கெதிராக 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தனது முந்தைய உலக சாதனையை தற்போது புதுப்பித்துள்ளார்.

இதே போல் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில், பாகிஸ்தான் பந்து வீச்சாளர் உமர்குல் 2009ம் ஆண்டு நியூசிலாந்துக்கெதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். அவருக்கு பின்பு டி20 கிரிக்கெட்டில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் எடுத்தவர் மென்டிஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.