பாலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை நக்கலடித்த நீதிபதி பணிநீக்கம்

அமெரிக்காவின் மான்டானா மாநிலத்தில் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியை நக்கலடித்த நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்று அவரை ஒரு மாதம் பதவி நீக்கம் செய்துள்ளது. 

அமெரிக்காவின் மான்டானா மாகாணத்தில் உள்ள பில்லிங்ஸ் நகர பள்ளியில் கடந்த ஆண்டு படித்து வந்த 14 வயது சிறுமி செரிஸ். இந்த பள்ளி ஆசிரியராக இருந்த ஸ்டாசி டீன் ராம்போல்ட் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். 

இதுதொடர்பான வழக்கு பில்லிங்ஸ் மாவட்ட நீதிபதி ஜி.டோட் பாக்கின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, சிறுமி பற்றி நீதிபதி டோட் தெரிவித்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறுமியை பார்த்தால் சின்னபெண் போல தெரியவில்லை என்று டோட் நக்கலாக கூறியுள்ளார். 

மேலும் ஆசிரியர் ராம்போல்டுக்கு வெறும் 30 நாள் சிறை தண்டனையை அவர் வழங்கினார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். கொதித்து போன குடும்பத்தினர், மான்டானாவில உள்ள மேல் நீதிமன்றில் மேல்முறையீடு செய்தனர். 

இதனை விசாரித்த நீதிமன்று, நீதிபதி டோட் பாக் தனது தவறான நடவடிக்கை மூலம் நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கையை அழித்து விட்டார் என்று கடும் கண்டனம் தெரிவித்தது. 

மேலும், சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்கு விசாரணை வேறொரு நீதிபதியின் கீழ் நடைபெறும் என்றும், சர்ச்சைக்குரிய நீதிபதி 31 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் நீதிமன்று கூறியது. நீதிபதி டோட் ஜூலை 1ம் திகதி ஆஜராகவும் நீதிமன்று உத்தரவிட்டது.