பங்களாதேஷிற்கெதிரான மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணி அறிவிப்பு

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தொடருக்கான 15 பேர் கொண்ட அணியே அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உலக டுவென்டி டுவென்டி தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் வெற்றிகொண்டுள்ள நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி மீது அதிக கவனம் ஏற்பட்டுள்ள நிலையில் இத்தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்குபற்றவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அணியில் அண்மையில் நியூசிலாந்து அணி அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்குபற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணியிலிருந்து அட்ரியன் பரத், ஃபிடல் எட்வேர்ட்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அணியில் டெரன் பிராவோ, கேர்க் எட்வேர்ட்ஸ், வீரசம்மி பேர்மாள் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் டெரன் பிராவோ கடந்த தொடரில் உபாதை காரணமாகப் பங்குபற்ற முடியாது போனதோடு, வீரசம்மி பேர்மாள் முதன்முதலாக மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ற் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒரு டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டி ஆகியன நவம்பர் 3ம் திகதி முதல் டிசெம்பர் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள அணி:

டெரன் சமி, டினேஷ் ராம்டின், ரீனோ பெஸ்ட், டெரன் பிராவோ, ஷிவ்நரின் சந்தர்போல், நர்சிங் டியோநரைன், கேர்க் எட்வேர்ட்ஸ், அஸ்ஸட் ஃபுடாடின், கிறிஸ் கெயில், சுனில் நரைன், வீரசம்மி பேர்மாள், கெரான் பவல், ரவி ராம்போல், கேமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ்.