நைஜீரியாவில் 20 பெண்கள் கடத்தல் - தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்

நைஜீரியாவில் 20 பெண்கள் கடத்தல் - தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம்

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரத்தில் துப்பாக்கி முனையில் 20 பெண்களை கடத்தி சென்றது போகோஹரம் தீவிரவாதிகள் என சந்திக்கப்படுகின்றது. 

ஏற்கனவே இத்தீவிரவாதிகளால் சுமார் 300 பள்ளிச்சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

போகோஹரம் தீவிரவாத குழுக்களின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அல்ஹா டர் என்ற நபர் கூறுகையில், கடந்த வியாழனன்று மதியம் துப்பாக்கியுடன் அங்கு வந்த நபர் ஒருவர், பெண்களை அவர்கள் வந்த வாகனத்தில் மிரட்டி ஏற்றிச்சென்றதாக கூறினார். 

அம்மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகவும் விளங்கும் மறைவிடத்திற்கு அப்பெண்கள் அழைத்து சென்றபோது தெரியவந்துள்ளது. 

இந்த கடத்தலை தடுக்க முயன்ற இரண்டு வாலிபர்களையும் தீவிரவாதிகள் கைது செய்து அழைத்து சென்றுவிட்டதாக தர் கூறியுள்ளார். கடத்தில் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்றதாகவும் அதற்கு முன்பே இந்த இடங்களை காலி செய்துவிட்டு தீவிரவாதிகள் சென்றுவிட்டதாக தர் மேலும் கூறினார்.