த‌மிழக‌த்த‌ில் மழைக்கு 14 பேர் பலி!

தமிழகத்‌தி‌ல் த‌ற்போது பெ‌ய்து மழை‌க்கு இ‌ன்று வரை 14 பேர் பலியாகி உ‌ள்ளன‌ர்.

த‌மிழக‌த்‌தி‌ன் தென் மாவட்டங்களில் த‌ற்போது வட‌கிழ‌க்கு பருவமழை பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ற்று முன்தினம் மழை காரணமாக சுவர் இடிந்து 4 பெண்களும், மின்னல் தாக்கி 2 பேரும் பலியானார்கள்.

நேற்று பெய்த மழையில் சாலை‌யில் தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சென்னை அயனாவரத்தில் ரமேஷ் என்பவரும், தண்டையார்பேட்டையில் மணி என்பவரும் பலியானார்கள்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மின்னல் தாக்கி அலெக்ஸ் என்பவர் இறந்தார். சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியில் தங்கமுனீஸ்வரி (32), அவருடைய தம்பி கண்ணன் ஆகியோரும், ஏ.ராமலிங்காபுரத்தில் காளீஸ்வரன் (33) என்பவரும் மின்னல் தாக்கி இறந்தனர்.

ருத்துறைப்பூண்டியில் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்த அய்யாக்கண்ணு (58), அவரது மருமகன் மகாலிங்கம் (40) ஆகியோர் மின்னல் தாக்கி பலியானார்கள். இதுவரை தமிழ்நாட்டில் மழைக்கு 14 பேர் பலியாகி விட்டனர்.

நேற்று அதிகாலை மழை பெய்ய தொடங்கியபோது பலத்த ஓசையுடன் இடி விழுந்தது. இதில் இடி தாக்கி சென்னை கொடுங்கையூரில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு காது செவிடானது. பல வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் போன்ற மின்சாதனங்கள் சேதமானது.

சேலம் மாவட்டத்தில் 5வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேலத்தில் விடிய,விடிய பெய்த மழையால் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.