தென்னிலங்கையர்களுக்கு தமிழகத்தில் வந்த சோதனை; கல்லெறியுடன் செருப்படியும்

தென்னிலங்கையர்களுக்கு தமிழகத்தில் வந்த சோதனை; கல்லெறியுடன் செருப்படியும்

தமிழகம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்துகொள்ள வந்த தென்னிலங்கை வாசிகள் பயணித்த பேரூந்து தமிழகம் திருச்சியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்து கொள்ள வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு எதிராக பல தமிழ் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் போராட்டம் நடத்தியதை அடுத்து அவர்களை சுமார் 5 பேருந்துகளில் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு வர காவற்றுறையினர் திட்டமிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை திருவாரூர் அருகே குறித்த பேரூந்து வந்த போது தன் மீது செருப்பு வீச்சு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்து இன்று மதியம் திருச்சி - தஞ்சாவூர் சாலையிலுள்ளள திருவெறும்பூர் அருகே வந்தபோது, கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்பபடுகிறது.

இதனையடுத்து காவற்றுறையினர் சிங்களவர்களின் பாதுகாப்புக் கருதி அவர்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைத்துவிட்டு பின்னர் நிலைமை சற்று சீரடைந்ததும் மிகுந்த பாதுகாப்புடன் அவர்களை திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். எனத் தமிழகத் தகவல்கள் தெரிவித்தன.

அதேநேரம், குறித்த தாக்குதல் சம்பவத்தில் பன்னிரண்டு பேர் காயமடைந்ததாக இலங்கை அரசின் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டடுள்ளது.

ஆனால் தாக்குதலில் எவரும் காயமடையவில்லை என தமிழகத்திலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.