தென்னாபிரிக்காவை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இங்கிலாந்து

தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்த 220 வெற்றி இலக்கை தொட்ட இங்கிலாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்கா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலா நான்காவது ஒரு நாள் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.


இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியின் ஆரம்த்தை பெற்றுக்கொடுக்க ஸ்மித் மற்றும் அமலா ஆகியோர் களம் கண்டனர்.

தென்னாபிரிக்க அணி 19.1 ஓவர்களில் 68 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 54 பந்துகளில் 29 ஓட்டங்களை பெற்றிருந்த ஸ்மித் 29 ஓட்டங்களுடன் டெரன்பெச் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களத்திலிருந்த அமலா 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டுமினி (18), வில்லியர்ஸ் (39), பீலிஸ் (1), ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் டிராட்வெல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

தொடர்ந்து 221 எனும் வெற்றி இலக்கை களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 46.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 224 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் பெல் (88), தோர்ட் (48), மோர்கன் (36), கிஸ்வெட்டர் (21) ஓட்டங்களை பெற்றனர்.
தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் ஸ்டெயின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக இயன் பெல் தெரிவு செய்யப்பட்டதோடு ஐந்து போட்டிகள் கொண்;ட இப் போட்டித் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.