திருமலை மத்திய வீதி வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தது.

திருமலை மத்திய வீதி வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தது.

திருகோணமலை மத்திய வீதிலுள்ள வர்த்தக நிலையமொன்று  இன்று பிற்பகல் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் அருகில் உள்ள கடைகளும் பாதிப்புக்குள்ளாகின.

சுமார் ஒரு மணித்தியாலய நேரத்திற்குப் பின் திருகோணமலை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பொது மக்கள் உதவியுடன் கட்டுப்பாடுக்கு கொணண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நிறுவனமொன்றின் மேல் மாடியில் ஏற்பட்ட தீயே பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் புலனாகவில்லை.

தீயினைக் கட்டுப்படுத்துவதற்காக  கடற் படையின் தீ அணைப்பு வாகனங்கள்  உடனடியாக  ஸ்தலத்திற்கு  வந்தன. இதனையடுத்து நகர சபை, பொலிஸ், இராணுவ தண்ணீர் தாங்கிகளும் ஸ்தலத்திற்கு வந்து நீரை வழங்கின. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, னக்குடா விமான படை தளத்தில் இருந்தும் தீ அணைப்பு வாகனமும்  கொண்டு வரப்பட்டது.  2 மணி நேர போராட்டத்தின் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இவ் விபத்து காரணமாக  அருகில் உள்ளஇரு வர்த்தக நிலையங்ள் சேதமடைந்ததுடன் வீடொன்றும் சிறிய   சிறிய சேதத்திற்கு உள்ளானது.. நகர சபையின் தலைவர் க.செல்வராசா ஸ்தலத்தில் நின்று  தீ அணைப்புக்கான உதவிகளை வழங்கினார்.

திகோணமலை நகர சபையில்  3  தீ அணைப்பு  வாகனங்கள் இருந்த போதிலும் அவற்றினால் சேவையை வழங்க  முடியவில்லை.  உத்தியோகபூர்வமாக  இவ்வாவாகனங்கள் கையளிக்கப்படவில்லை எனவும்இ  இதனால் தம்மால் சேவையினை  வழங்க  முடியாது இருப்பதாகவும் அவர்  குறிப்பட்டார். இத் தீவிபத்து திருகோணமலை பொலிஸார் தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.