தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத்தமிழர் ஐவர் விடுதலை

தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத்தமிழர் ஐவர் விடுதலை

தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்களுள் ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த செந்தூரன் உள்ளிட்ட ஈழத்தமிழர்கள், தம்மை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தமிழகத்திலுள் தமிழ் அமைப்புக்களும், தமிழின உணர்வாளர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டங்களின்போது, காவற்றுறை கண்காணிப்பாளர் சம்பத்குமார், படிப்படியாக முகாம் தமிழர்களை விடுதலை செய்வோம் என உறுதியளித்திருந்தார்.

அதன்படி, இன்று ஜெயதாசன், அலெக்ஸ், நாகராசா, நர்மதன், சதாசிவன் ஆகிய ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அதன்படி சென்ற மாதம் ஏழு பேர்களையும், இம்மாதம் ஐந்து பேர்களையும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 45 நாட்களில் இதுவரை 16 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்கும் விதமாக சிறிது சிறிதாக தமிழக அரசு முகாம் வாசிகளை விடுதலை செய்து வருகின்றமை அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

தமது இந்த விடுதலைக்காகப் போராடிய அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.