ஜி 8 நாடுகளிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்

க்ரைமியா தொடர்பான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜி 8 நாடுகள் அமைப்பிலிருந்து அந்த நாடு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

நெதர்லந்தில் நடத்து வரும் அணுசக்தி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் இங்கிலந்து ஆகிய நாடுகள் இதற்கான முடிவை எடுத்தன. ரஷ்யாவின் சோச்சி நகரில் ஜூன் மாதம் நடைபெறவிருந்த ஜி8 மாநாட்டையும் அவை ரத்து செய்தன. 

க்ரைமியா விவகாரத்தில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜி7 நாடுகள் தெரிவித்துள்ளன. 

ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகள் எடுக்க உள்ளதாகவும் ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.