சிரியாவில் அடுத்த ஜனாதிபதி யார்?

சிரியாவில் அடுத்த ஜனாதிபதி யார்?

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. 

வழக்கமாக ஜனாதிபதி ஆசாத் மட்டுமே போட்டியிடுவார். ஆனால், இந்த தடவை அவருக்கு எதிராக மெஹர் கஜ்ஜார், ஹசன் அல்–நூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆனால், ஆசாத் மட்டுமே மக்கள் அறிந்த வேட்பாளர் ஆக உள்ளார். இன்று 1 கோடியே 58 லட்சம் பேர் ஓட்டு போடுகின்றனர். அதற்காக 9,600 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதற்கிடையே ஓட்டுப் பதிவை புறக்கணிக்கும்படி பொது மக்களிடம் முக்கிய எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இருந்தும் இந்த தேர்தலில் ஜனாதிபதி பஷர் அல்–ஆசாத்துக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் 3–வது தடவையாக மேலும் 7 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.