சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அணித் தலைவராக மஹேல தெரிவு

 

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன பெயரிடப்பட்டுள்ளார்.

 


உலக கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து ஒருநாள் கடந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐவர் அடங்கிய சர்வதேச கிரிக்கெட் பேரவையின் குழுவினால் இந்த அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணிசார்பாக மூன்று வீரர்களும், மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக இருவரும், 11 வீரர்கள் அடங்கிய இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

 

கிறிஸ் கெய்ல் மற்றும் ஷேன் வொட்சன் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் விராட் கோஹ்லி, இங்கிலாந்தின் லுக் ரைய்ட், மற்றும் மேற்கிந்திய தீவுகளின் மார்லன் சமுவெல்ஸ் ஆகியோர் மத்தியவரிசை வீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் இளம் வீரர் மிச்சேல் ஸ்டாக், இலங்கை அணியின் லசித் மாலிங்க, ஆகியோர் வேகப்பந்துவீச்சாளராக அணியில் இடம்பிடித்துள்ளனர்.

பாகிஸ்தானின் சயிட் அஜ்மால் மற்றும் இலங்கையின் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் சூழற்பந்துவீச்சாளர்களாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரண்டன் மெக்கலம் விக்கெட் காப்பளாராக அணியில் இடம்பிடித்துள்ளார்.