சத்தும் ரூசியும் நிறைந்த அவல் லட்டு

அவல் லட்டு பத்து நிமிடத்தில் தயாரிக்கலாம். எளிமையான சத்தான இனிப்பு இது.
 
தேவையான பொருட்கள்
அவல் – 1 கப்
சீனி – 1 கப்
தேங்காய் துருவல் வறுத்தது – ஒரு கப்
முந்திரி, வறுத்த நிலக்கடலை – 1/2 கப்
 
லட்டு செய்முறை
அவலை சுத்தம் செய்து வைக்கவும். அகலமான பாத்திரத்தில் சீனியை கொட்டி பதமாக பாகு காய்ச்சவும். இந்த பாகில் அவலைச் சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் முந்திரி,  வறுத்த நிலக்கடலை, தேங்காய் துருவல் ஆகியவைகளை சேர்த்து கிளற வேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மிதமான சூட்டில் லட்டு பிடிக்க வேண்டும். ஆறினால் இறுகிவிடும் எனவே சூடு ஆறும் முன் லட்டு பிடிக்கவேண்டும்.